Wednesday, January 26, 2011

தமிழ் ஓவியாவில் எழுதியது...குறளும் சங்கராசாரியரும்...


ஏதோ மடையன் கீதாவில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி கூறப்பட்டுள்ளது என்று கூறியதை எடுத்து ஆண்டிருக்கிறீர்கள். தங்களைத் தவறாக வழிகாட்டியிருக்கிறார்கள்.
चातुर्वर्ण्यं मया सृष्टं गुण-कर्म-विभाकशः ।
तस्य कर्त्तारमपि मां विद्ध्यकर्त्तारमव्ययम् ।। गीता ४ : १३ ।।
சாதுர்வர்ண்யம் மயா ஶ்ருஷ்டம் குணகர்ம-விபாகஶஹ
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்தி அகர்த்தாரம் அவ்யயம் (கீதா ௪ :௧௩)
நான்கு வர்ணங்கள் என்னால் குணத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டன. அவற்றை நான் படைப்பது போல் தோன்றினாலும், நான் படைக்கவில்லை. (இந்த குணத்தைச் சாரந்தவர்கள் இந்த வர்ணம் என்பது பகவானின் சட்டம். அவரவர்களே தங்கள் குணங்கள் மூலமாக ஓரொரு வர்ணத்தைச் சார்ந்தவர்களாகிறார்கள். பள்ளிக்கூட மாணவனுக்கு வெற்றி மதிப்பெண்ணோ, தோல்வி மதிப்பெண்ணோ போடுவது ஆசிரியரானாலும் அது மாணவனின் படிப்பின் அடிப்படையிலேயே இடப்படுவதால் மாணவனே தனது வெற்றி, தோல்வியை முடிவு செய்கிறான்.)
ब्राम्हण-क्षत्रिय-विशां शूद्राणां च परन्तप ।
कर्माणि प्रविभक्तानि स्वभाव-प्रभवैर्गुणैः ।। गीता १८ : ४१-४४ ।।
ப்ராம்ஹண-க்ஷத்ரிய-விஶாம் ஶூத்ராணாம் ச பரந்தப
கர்மணி ப்ரவிபக்தானி ஸ்வபாவ-ப்ரபவைர்குணைஹீ (கீதா ௧௮ :௪௧-௪௪)
ப்ராம்ஹணர், க்ஷத்ரியர், வைஶ்யர் மற்றும் ஶூத்ரர்களின் செயல்கள் அவர்களுக்கு இயல்பாயமைந்த குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
ब्राम्हणः क्षत्रियो वैश्यस्त्रयो वर्णा द्विजातयः ।
चतुर्थ एकजातिस्तु शूद्रो नास्ति तु पञ्चमः ।। मनु १० : ४ ।।
ப்ராஹ்மணஹ க்ஷத்ரியோ வைஶ்யஸ்த்ரயோ வர்ணா த்விஜாதயஹ
சதுர்த்த ஏகஜாதிஸ்து ஶூத்ரோ நாஸ்தி து பஞ்சமஹ (மநு ௧0 :)
ப்ராம்ஹணர், க்ஷத்ரியர், வைஶ்யர் ஆகிய மூவரும் த்விஜர்கள். நான்காவது ஶூத்ரர். ஐந்தாவது ஒரு வர்ணம் என்பது கிடையாது.
ஆயிரக்கணக்கில் இருக்கும் ஜாதிக்கும், நான்கேயான வர்ணத்திற்கும் முடிச்சு போடுவது மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல உள்ளது.
கீதாவைச் சொன்னவனும் ப்ராம்ஹணன் அல்லன். கேட்டவனும் ப்ராம்ஹணன் அல்லன். எழுதினவனும் ப்ராம்ஹணன் அல்லன். அதைப் படிப்பவனும் ப்ராம்ஹணனாக இருக்கவேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். 

Thursday, January 20, 2011

குமரிக் கொடூரங்கள்

1.       1982-இல் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலய திருவிழாவின்போது கிறிஸ்தவ மத பிரச்சார வெளியீடுகள் இந்துக்களிடம் விளம்பப்பட்டது. பெண்களின் சபரிமலையான மண்டைக்காட்டிற்கு பெருமளவில் பக்தைகள் கேரளாவிலிருந்து கட்டு கட்டி வருவர். அப்பெண்களின் சேலையை உருவி மானபங்கப்படுத்தினர் கிறிஸ்தவ மீனவர்கள். கலவரத்தில் காணாமல் போன இந்துக்கள்.
2.       பிள்ளையார்புரம் அம்மன் கோவில் பவனி கிறிஸ்தவர்களுக்காகத் தடுப்பு.
3.       உடையார்விளை நாராயண சாமி கோவில் மதில் சுவரை மாவட்ட நிர்வாகம் கிறிஸ்தவர்களுக்காக உடைத்தது.
4.       மணலி பட்டா பூமி பிள்ளையார் கோவில் பூஜை தடுப்பு.
5.       அருமனை ாஸ்தா கோவில் மண்டல பூஜை தடுப்பு.
6.       கைதக்குழி ஶாஸ்தா கோவில் அருகில் திடீர் சர்ச் உருவாக்க முயற்சி.
7.       கிருஷ்ணன் கோவிலில் திடீர் என்று அந்தோணியார் சொரூபம் வந்து அதனை எடுக்க மறுக்கும் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு ஆதரவான மாவட்ட நிர்வாகத்தின் செயல்.
8.       தெக்குறிச்சி கடலோர பகுதி அய்யா கோவில் கிறிஸ்தவ மீனவர்கள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
9.       பண்ணையூர் கிறிஸ்தவர்கள் பதற்றம் ஏற்படுத்துகின்றனர்.
10.   ஒற்றைதெங்கன் விளையில் கிறிஸ்தவர்கள் பதற்றம் ஏற்படுத்துகின்றனர்.
11.   மண்டைக்காட்டில் சாலையோரக் கடைகளுக்கு கிறிஸ்தவர்கள் வரிவசூல், பஞ்சாயத்து வேடிக்கை.
12.   தடைசெய்யப்பட்டிருந்த குலசேகரம் ஐக்கிய கிறிஸ்துமஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பையும் மீறி காவல்துறை அனுமதி.
13.   மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம் அருகில் சுனாமி குடியிருப்பு நிலத்தில் சட்டத்தை மீறி திடீர் சர்ச் கட்டி மீண்டுமொரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சி, போராட்டம் நடத்திய இந்துக்கள் கைது.
14.   அரசியல்வாதிகள் மூலம் அதிகாரிகளை வசப்படுத்தியும், நீதிமன்றத்தை ஏமாற்றியும் குமாரபுரம் கைதோட்டில் ாஸ்தா கோவில் அருகில் சட்டவிரோதமாக திடீர் சர்ச் அமைக்க முயற்சி
15.   தக்கலை கரைகணடார்கோணம் சந்திப்பில் பட்டா நிலத்தில் விநாயகர் ஆலயபூஜைக்கு அரசே தடைவிதித்துள்ள அவலம்.
16.   அரமன்னம் காவுவிளை ஶப்த மாதர்கள் கோவில் பாரம்பரிய திருவிழாவிற்கு குந்தகம் ஏற்படுத்த சர்ச்சே இல்லாத இடத்தில் அதிகாரிகள் உறுதுணையோடு புதிதாக கிறிஸ்துமஸ் விழா.
17.   திருவட்டாறு புத்தன்கடை ஸந்திப்பில் அனுமதியில்லாமல் திடீர் குருசடி, இந்துக்களின் தந்திகள், மனுக்கள் காற்றில் பறந்த வினோதம்.
18.   ஆற்றூர் பள்ளிக்குழிவிளை காவு கோவில் அருகில் அனுமதி இல்லாமல் ஜபக்கூடம், விளைவு – பாரம்பரிய காவு கோவில் திருவிழாவிற்கு தொடர் முட்டுக்கட்டை.
19.   திருவட்டாறு பாலூட்டுவிளையிலும், உம்மன்கோட்டிலும் மாவட்ட நிர்வாகத்தின் தடையுத்தரவை மீறி தொடரும் சட்டவிரோத சர்ச் நடவடிக்கைகள், வேடிக்கை பார்க்கும் அரசு அதிகாரிகளும், காவல்துறையும்.
20.   குலசேகரம் குளச்ச விளாகத்தில் கோவில் விழா நடத்த இடையூறு. இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல், பொய் வழக்கு.
21.   தோவாளை ஒன்றியம் வடக்கு மார்த்தாலில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை சேதப்படுத்தி பாதுகாவலுக்கிருந்த இந்து இளைஞர்கள் வெட்டிச் சாய்ப்பு – நாளிது வரை நடவடிக்கை இல்லை.
22.   தடிக்காரன்கோணம் ஸ்ரீ தர்மஶாஸ்தா கோவில் சிலைகளை உடைத்த கயவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை,
23.   பார்வதிபுரத்தில் திடீர் ஜபக்கூடம் அமைக்க முயற்சி. நியாயம் கேட்டுப் போராடிய இந்துக்கள் கைது.
24.   ஜபக்கூடமாக மாறிவரும் ராணித்தோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை.
25.   நாலுமாவடி ஜபக்கூட்டத்திற்கு சனிக்கிழமைதோறும் சிறப்புப் பேருந்து. கன்யாகுமரி ஸ்ரீநிவாஸ கல்யாணத்திற்கு சிறப்பு பேருந்து மறுப்பு.
26.   புத்தளத்தில் பட்டா நிலத்திலிருந்த ஶிவசுயலைமாட சாமி திருச்சிலையை நடுஇரவில் கிரேன் மூலம் அகற்றிய காவல்துறை. மறியல் செய்த இந்துக்கள் கைது.
27.   கன்யாகுமரியில் அனுமதியுடன் பட்டா நிலத்தில் நிறுவப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை கிறிஸ்தவர்களின் நெருக்கடியால் கிரேன் மூலம் அரசே தூக்கிச் சென்ற அவலம்.
28.   போதகர்களின் கூடாரமாக மாறிவரும் ஆசாரிப்பள்ளம் அரசு கன்யாகுமரி மருத்துவ கல்லூரி. மௌனம் ஸாதிக்கும் ஸுகாதாரத்துறை
29.   திங்கள் நகர் இராதாகிருஷ்ணன் கோவில் அருகில் அனுமதி இல்லாமல் குருசடி கட்ட முயற்சி.
30.   தக்கலை ஒன்றியம் வாழோட்டில் வீடு என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்த இடத்தில் ஊராட்சித் தலைவரின் முழு ஆதரவோடு வலுக்கட்டாய ஜபக்கூட்டம்.
31.   விழுந்தையம்பலத்தில் சர்ச் விழாவிற்கு ஒலிபெருக்கி அனுமதி அளித்துவிட்டு, இந்து ஆலய விழா ஒலிபெருக்கிகளை அகற்றிய காவல்துறை.
32.   முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையே இந்து மாணவர்களுக்குப் பைபிள் கொடுத்து மதம் மாற்ற முயற்சி. போராடிய இந்துக்கள் மீது பொய்வழக்கு.
33.   அஞ்சுகண்ணு கலுங்கில் உரிமையில்லா இடத்தில் சர்ச் கட்ட முயற்சி. சட்டமன்ற உறுப்பினரே களமிறங்கி அராஜகம்.
34.   காளிமலைக்கு சிறப்புப் பேருந்து இல்லை. காளிமலையில் கிறிஸ்தவர்கள் ஆக்ரமிக்க முயற்சிக்கும் இடத்திற்கு சிறப்பு பேருந்து.
35.   அருமனை தச்சூர் கோணத்தில் தேவாலய சிலை உடைப்பு – இந்துக்கள் மீது புகார் – கிறிஸ்தவ அரசியல்வாதி மகன் பிடிபட்டதால் காவல்துறை மௌனம்.
36.   கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகை, இந்து மாணவர்களுக்கு மட்டும் இல்லை.
37.   பட்டா நிலமெல்லாம் சர்ச் கட்டிக்கொள்ளலாம் என்கிறார் முன்னாள் முதல்வர். புறம்போக்கில் கூட கட்டிக்கொள்ளலாம் என்கிறார் இன்னாள் முதல்வர். போட்டி போட்டு கிறிஸ்தவர்கள் மீது பரிவு. இந்துக்கள் புறக்கணிப்பு.
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் 9-1-2011 ஞாயிறு மாலை 4.00 மணி, தக்கலை அண்ணா சிலை சமீபம்.

தமிழ் ஈழ பிரச்சினையும், காஷ்மீரப் பிரச்சினையும் -வாசகர் கடிதம் தினமலர்

சுந்தர்ராஜன் கூறியது நூற்றிலொரு வார்த்தை. இலங்கை சென்று வந்தவர்களுக்கும், இலங்கை மலைத்தமிழர்களைக் கண்டவர்களுக்கும் தமிழ்ப் போரில் இலங்கை மலைத்தமிழர்கள் அடங்க மாட்டார்கள் என்ற உண்மை தெரியும்.
அடுத்து இதனைக் காஷ்மீருடன் ஒப்பிட்ட வாசகரின் அறியாமையை நினைந்து வருந்துகிறேன். பாகிஸ்தான், வங்காளதேஶம் எல்லாம் பாரதத்தின் பகுதிகள். இஸ்லாமிய வெறியர்களால் துண்டாடப்பட்ட பாரதம் தனது இழந்த பகுதிகளை மீட்டெடுக்கும். ஸரஸ்வதி ஓடிய பகுதி, காந்தாரி பிறந்த பகுதி, தக்ஷஶீல பல்கலைக்கழகம் அமைந்த பகுதி, ஹரப்பா, மொஹஞ்சதாரோ எல்லாம் மீட்டெடுக்கப்படும். பாரதத்தைத் துண்டாடி ஆக்ரமிப்புக்காரன் பாபருக்கு காவடி எடுப்பவர்கள் ஒழித்துக்கட்டப்படுவார்கள்.

சபரிமலை மரணத்தீயில் லாபங்காண பிடுங்கியவர்கள்

வீடு எரிந்ததாம், ஒருவன் பீடி பற்றவைத்தானாம். இந்த கடவுள் நம்பிக்கையற்ற தமிழ்வெறியர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் என்று கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு அச்சாணி போடுகிறார்கள். பெரியார் பக்தர்களிடமும் - ஸ்ரீரங்கம் சிலை, ஏசு பக்தர்களிடமும் - வேளாங்கண்ணி , அல்லா பக்தர்களிடமும் - ஹஜ், தங்கள் பகுத்தறிவைக் காட்டுவது தானே. பத்வா வரும். வராவிட்டாலும் உயிர் மிஞ்சாது. இந்துக்கள் இளித்தவாயர்கள். எனவே என்ன வேண்டுமானாலும் பேசலாம். மக்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். அவர்களிடம் கட்டணங்களும், காணிக்கைகளும் வாங்கிவிட்டு கொழுக்கும் அரசைக் குறைசொல்வதை விட்டு விட்டு பக்தியைக் குறைசொல்ல வந்திருக்கிறார்கள் அல்ப மூடர்கள்.
தமிழ், தமிழ் என்று குரைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை - கன்யாகுமரி வேளிமலை, மண்டைக்காடு, சுசீந்திரம், திருச்செந்தூர் இங்கெல்லாம் மலையாளிகள் வந்து குவிகிறார்கள்.

இதுதான் கருணாநிதியின் வள்ளுவர் வழி ஆட்சி

௧. கடவுள் வாழ்த்து, ‌‍‌௧௪. ஒழுக்கமுடைமை, ௧௫. பிறனில்  விழையாமை, ௧௮. வெஃகாமை, ௨௧. தீவினை அச்சம், ௨௬. புலால் மறுத்தல், ௨௯. கள்ளாமை, ௯௨. வரைவில் மகளிர், ௯௩. கள்ளுண்ணாமை, ௧௦௪. உழவு என்று எல்லா அதிகாரங்களும் கடைபிடிக்கப்படுவதைப் பார்த்தால் வள்ளுவர் அசந்து -வியந்து/சோர்ந்து - போவார், போங்கள்.

Wednesday, January 19, 2011

பாரத பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதில்லை. ஏன் - தினமணி தலையங்கத்துக்கு பதில்

பாரதம் ஒரு ஹிந்து நாடு. பாரத பாரம்பரியம் என்பது ஹிந்து பாரம்பரியம். ஹிந்து பாரம்பரியத்தைக் காப்பது என்பது (ஹிந்து)மதசார்பின்மைக்கு எதிரானது. எனவே பாரம்பரிய சின்னங்களை எவ்வாறு காப்பாற்றமுடியும்?
மெட்ரோ ரயில் பாதையின் குறுக்கே மசூதி வந்தால் மெட்ரோ பாதையை மாற்ற வேண்டும்(தில்லி, ஹைதராபாத்). கோவில் வந்தால் கோவிலை இடித்து மாற்ற வேண்டும். இதற்கு பெயர் தான் மதசார்பின்மை.
தங்க நாற்கர சாலைக்கு குறுக்கே சர்ச் வந்தால் தங்க நாற்கர சாலையை மாற்ற வேண்டும்(ஈரோடு). கோவில் வந்தால் கோவிலை இடித்து மாற்ற வேண்டும். இதற்கு பெயர்தான் மதசார்பின்மை.
ஆக்ரமிப்பாளன் பாபருக்கு மசூதி வேண்டும். மண்ணின் மைந்தன் இராமனுக்கு கோவில் கூடாது.
தேஜோமஹாலயா சிவன் கோவில் தேவையில்லை. தாஜ்மஹால் தான் தேவை.
ஸேது பாலம் தேவையில்லை. அதை உடைப்பதுதான் தேவை.
கங்கை தேவையில்லை. கங்கையை அழிக்கும் அணைகள் தான் தேவை.
வேல்நெடுங்கண்ணி அம்மன் தேவையில்லை. வேளாங்கண்ணி தான் தேவை.
நாகூர் சிவன் தேவையில்லை, தர்கா தான் தேவை.
காஷ்மீரி பண்டிட்கள் எக்கேடு கெட்டால் என்ன, காஷ்மீர் முஸ்லீம்கள் தான் முக்கியம்.
ஹஜ்யாத்திரைக்கு பணம் கொடுப்போம், கைலாச, அமரநாத, சபரிமலை, பழநி, திருப்பதி..... யாத்திரைக்கு பணம் புடுங்குவோம்.
ஜெருசலத்துக்கு பணம் கொடுப்போம். வைஷ்ணவிக்கு பணம் புடுங்குவோம்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கையில் ஆலயங்கள். இந்து என்று சொல்ல வெட்கப்படுபவர்கள் கையில் கோவில்கள். எப்படி உருப்படும்?
வந்தேமாதரம் பாடமுடியாதவர்களுக்கு சலுகைகள், தேசபக்தர்களுக்கு புறக்கணிப்பு.
நாடு மதசார்பின்மை வேடத்தைக் களைந்தால்தான் உருப்படும். இது இந்து நாடு. இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள். இந்துக்களுக்கு ஸமமாக நடத்தப்படுவது ஸம்மதமானால் விருப்பமுள்ளவர்கள் இங்கே தங்கட்டும்.

Wednesday, January 5, 2011

புத்திசாலி கிறிஸ்தவர்கள்

இந்த கிறிஸ்தவர்கள் எப்போதுமே புத்திசாலிகள். வடக்கே சென்னையில் கருணாநிதியை அழைத்து தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள். தெற்கே ஜயலலிதாவை அழைத்து அதே கோரிக்கையை வைக்கிறார்கள். யார் ஜயித்தாலும் அவர்கள் சட்ட/நியாய விரோதமாக 1. புறம்போக்கில் சர்ச் கட்டுவார்கள், -வேணுகோபால் கமிஷன் கமிஷனில் மூழ்கிவிடும் - 2. கிறித்தவ மதம் மாற்றப்பட்டவர்களுக்கு சலுகை பெறுவார்கள், - ரங்கநாத் மிஶ்ரா, சர்ச்சார் கமிற்றி எல்லாம் நடைமுறைக்கு வரும் - 3. ஹஜ் போல ஜெருசல யாத்திரையும் அரசு இந்துக்கள் பணத்தில் போய் வருவார்கள். இந்த ஏமாந்த சோணகிரிகள் அம்மாவும், ஐயாவும் வாக்கு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். இளிச்சவாயன் இந்துவுக்கு பட்டை நாமம். கோவிந்தா, கோவிந்தா. திருப்பதியில் பணம் புடுங்குவார்கள். அரோஹரா அரோஹரா பழநியில் பணம் புடுங்குவார்கள். ஸ்வாமியே சரணம் ஐயப்பா சபரிமலையில் பணம் புடுங்குவார்கள். கிறித்தவனுக்கும், துலுக்கனுக்கும் கொடுப்பார்கள். மண்ணின் மைந்தர்கள் சுரண்டப்படுவார்கள். மைனாரிட்டிகள் சீராட்டப்படுவார்கள். எந்த அறிவு ஜீவிக்கும் தட்டிக்கேட்கிற திராணி கிடையாது. எந்த ஊடகத்திற்கும் முதுகெலும்பு கிடையாது. இதுவரை தட்டிக்கேட்டதில்லை.