சூதாட்டபுகழ் அஸாருதீனின் மனைவி மற்றும் முன்னாள் நடிகை ஸங்கீதா பிஜ்லானி, முன்பு தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர். தாவூத் பாகிஸ்தானில் வஸதியாக வாழ்வதாக நம்பப்படுகிறது. பாகிஸ்தானில் – அஸாரின் பங்காளி மாலிக் – இப்ராஹிமின் கூட்டாளிகளில் ஒருவர் என்று பல பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு சின்னக் கொசுறு – அஸார் ஹைதராபாத் நகருக்காக கிரிக்கெற் ஆடியவர். அதே ஹைதராபாத்தின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா – முன்பு பாகிஸ்தான் கிரிக்கெற் காப்ற்றனாக விளங்கி, பின்பு வில்லங்கத்தில் சிக்கிய ஷோயேப் மாலிக்கை மணந்து கொண்டார்.
ஹைதராபாத்துக்கும், பாகிஸ்தானுக்கும் நமது நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே சற்று சிக்கல் தான். அக்காலத்தில் பாரதநாட்டுக்குச் சொந்தமான ஏராளமான செல்வத்தை கடத்திச் செல்ல, அன்றைய நிஜாம் முயன்று தோற்றார். அவர் ஹைதராபாத்தின் மன்னர். - துக்ளக் வார இதழிலிருந்து.
No comments:
Post a Comment